இடுகைகள்

இகிரு (வாழ்தல்)

படம்
  மனித மனத்தின் நுண்ணுணர்வை திரைமொழியாக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரேசவாவின் படம் இகிரு. பணியாற்றும் காலத்தில் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படமால் முப்பது ஆண்டுகளாக அரசு பொதுப்பணித்துறையில் விடுப்பே எடுக்காத, தொடர்ந்து பணிப்பாதுப்பை மட்டுமே முன்னிருத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, தலைமை அலுவலராக உயர்ந்து, சில மாதங்களில் ஒய்வு பெற இருக்கும் நிலையில், குடல் புற்று நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரியும் போதும் தன் மகனால் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒரு மனிதன் எப்படியான முடிவை நோக்கி நகர்வான் என்பதையும்   அதனூடாக அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செயல்பாடுகளையும்   பேசுகிறது இகிரு . படத்தின் தொடக்கத்தில் ஒரு ஊடுகதிர் (எக்ஸ்ரே) காட்டப்படுகிறது. பின்னணியில் நமது கதாநாயகனுக்கு வயிற்றில் புற்று நோய் என்பதை அறியாமல். தன் பணியில் முழுமையாக செய்து கொண்டிருக்கிறார் என ஒலிக்கிறது.   கதாநாயகன் வடனபே பொதுப்பணித்துறையில் தற்போது தலைமை அதிகாரியாகப் கடந்த முப்பதாண்டுகளாகக் கடமையே கண்ணாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க...

வள்ளுவம் இதழ் (1999 – 2003)

படம்
    வள்ளுவம் இதழ் இரு திங்கள் இதழாக சனவரி பிப்ரவரி 1999 இல் தொடங்கப் பெற்றது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகு என்னும் தொடரை முதன்மைபடுத்தி வள்ளுவம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 22 இதழ்கள் வெளிவந்துள்ளன.   சிறப்பாசிரியர் பேராசிரியர் ச. மெய்யப்பன். ஆசிரியர்கள் பல்லடம் மாணிக்கம், பேராசிரியர் இ. சுந்தமூர்த்தி, நெறியாளுகை குழு பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம், புலவர் இரா. இளங்குமரன், பேராசிரியர் தி. முருகரத்தினம், மருதமுத்து, ஆசிரியர் குழு க.ப. அறவாணன், ஈரோடு தமிழன்னபன், இரா. இளவரசு, பா. வளவனரசு, சு. சண்முகசுந்தரம், இன்குலாப், கி. நாச்சிமுத்து வடிவமைப்பு இராம. கண்ணப்பன், வே. கருணாநிதி, ஒவியர் ட்ராஸ்கி மருது, பல்லடம் மாணிக்கம்   பண்பாட்டு ஆய்வு மையம் வழியாக வெளிவந்துள்ளது. ஐந்தாவது இதழில் (செப்டம்பர்- அக்டோபர், 1999) ஒவியர் ட்ராஸ்கி மருதுவுடன் மாரிமுத்து, புகழேந்தி இணைந்துள்ளனர். இதழ் வடிவாக்கம் வசந்தகுமார் என்று உள்ளது. 7வது இதழில்(சனவரி- பிப்ரவரி 2000) ஓவியர் மாரிமுத்து மட்டும் இடம்பெறுகிறார். வடிவமைப்பில் வே. கருணாநிதி மட்டு...

தையல் சிட்டும் நானும்

படம்
  தாயின் பராமரிப்பிலிருந்து பறக்கும் நிலையில் பறக்க எத்தனித்த போது கீழே விழுந்து கிடந்த தையல்சிட்டு குருவியைத் தமிழ்த்துறையின் நூலகர் திரு ஜோசப் அவர்கள் எடுத்துவந்து (காலை 10மணி வாக்கில்) முனைவர்பட்ட மாணவர்களிடம் கொடுத்துள்ளார். தையல்சிட்டு வந்த செய்தியை அறிந்து பார்க்க சென்றேன். அதனை உள்ளங்கையில் பொத்தி வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் எதுவும் செய்ய இயலாது என்றார்கள். நான் அதனை வாங்கி கொண்டு வந்து சொட்டுச் சொட்டாகச் சில சொட்டுகள் தண்ணீர் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்விழித்துப் பார்த்தது. அடுத்து என் கையிலிருந்து என் மேலே ஏறியது. பையப்பைய நகர்ந்து தோளில் அமர்ந்து பிறகு என் கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் சங்கிலியைப் இறுக பற்றிக்கொண்டது. இறங்கவேயில்லை. அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டது. எனக்கு வகுப்பு இருந்தது. வகுப்பு எடுக்கச் சென்றேன். எந்த சத்தத்திற்கும் அசங்கவில்லை. கண்விழித்து விழித்துப் பார்த்துவிட்ட பழைய நிலைக்கே சென்றது. அது கையில் பிடித்திருந்த பிடியை நகர்த்தவே இல்லை. வகுப்பு மாணவர்கள் பிடித்து இழுத்துப்பார்க்கின்றார்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை...

மிட்டாய் தாத்தா

படம்
  புன்னகைத் தவழும் முகம். மழலை மொழி. தெளிவான பேச்சு. காண்பவரை வாழ்த்தும் வாய்மொழி. தள்ளாட்டம் இல்லா சொல்லாட்டம். தீர்க்கமான கண்கள்.முதுமையின் ரேகை புறத்தில் மட்டுமே. உழைப்பை நம்பி வாழும் மனிதர்   உழைத்துப் பெற்றதைப் பிறருக்கு உதவும் மனம் என வாழ்ந்து வரும் 121 வயதான மிட்டாய் தாத்தா என்ற முகமது அபுசலி அவர்களை 28.08.2025 அன்று தஞ்சாவூர் மானம்பூச்சாவடி ஆடக்காரத் தெருவில் சந்தித்தேன்.               இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மாவைக் கைபற்றிய பொழுது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அந்த காலக்கட்டத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பின்களையும் படையினர்   தம் கண் முன்னே வெட்டிக் கொன்ற நிலையில் இவர் தப்பித்து அந்தமான் கப்பலில் தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.             தஞ்சாவூர் வந்தடைந்த பொழுது அவருக்கு 50 வயது. மிட்டாய் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டு தன் வாழ்நாள் முழுதும் அத்தொழிலையே மேற்கொண்டதால் மிட்டாய் தாத்தா என அழைக்கப்பெறுகிற...

மனித குலத்தின் நம்பிக்கை - டாக்ஸி டிரைவர்

படம்
             தென் கொரியாவின் அரசியல் சூழல் 1980 இல் மிக கொந்தளிப்பான காலக்கட்டமாக இருந்தது. காரணம் 1979 அக்டோபரில் அதிபர் பார்க் சுங் –ஹீ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து   ஜெனரல் சுன் டூ ஹ்வானின் இராணுவ ஆட்சியும், அடக்குமுறையும், நாடு முழுதும் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வெடித்தெழுந்தன. குறிப்பாக குவாங்ஜூ பகுதியில் ஏற்பட்ட மக்களெழுச்சி காரணமாக இராணுவம் மக்களை அடித்து கொடுமை படுத்தி,   பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், துப்பாக்கி சூட்டில் பலர் மாண்டனர். இச் செய்தியை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் வந்த ஜெர்மன் பத்திரிக்கையாளரை தென்கொரியாவின் நகரமான சியோலில் இருந்து குவாங்ஜூ அழைத்துச் சென்ற ஓட்டுநரின் கதையும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதனைக் கடந்து அவர்கள் குவாங்ஜூவிலிருந்து எப்படித் தப்பி வந்தார்கள் என்பதைப் பற்றி பேசும் படம் TAXI DRIVER. தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்கின் உதவி இயக்குநர் ஜாங் கூன் 2017 இல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் - உறவுகளின் மொழி

  உறவு என்னும் பெயர்ச்சொல்லுக்கு அடைதல், தொடர்பு (பிணைப்பு), நட்பு, சுற்றம், அன்பு, விருப்பம் என்னும் பொருள்கள் உள்ளன [1] . மனித வாழ்க்கைக்கு உறவு என்பது அடிப்படை. ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. குடும்ப உறவு, உற்றார் உறவினர், சுற்றத்தார் உறவு, சமூகத்தோடு கொள்ளும் உறவு, இனம், மொழி கடந்த உறவு என விரிந்து மானுடம் இயக்குகிறது. உறவு என்பது அன்பின் வெளிப்பாடு, பண்பின் செயற்பாடு. நல்ல உறவு முறைகளும் நல்ல உணர்வு முறைகளுமே ஆறறிவு உருவத்தை மனிதனாக்கும். மனித வாழ்க்கையில் உறவுகள் காலங்களை எல்லாம் கடந்து நிற்கின்றன. தொடர்புகள் நிலைக்க ஒன்று பிறிதொன்றுடன் தொடர்பில்லாமல் வாழ்தல் இயலாது. ஒன்று பிறிதொன்றைச் சார்ந்து வாழ வேண்டும். அந்த சார்பு நிலையில் ஒழுங்கு அமைய வேண்டும் அதுதான் மனித உறவு. உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே [2]   நாகரீக காட்டாற்று வெள்ளத்தில் நீந்தி திளைத்த மனிதக்கூட்டம், பண்பாடு என்னும் கரைகளை மெல்ல மெல்ல உருவாக்கி உறவுகளைச் சீர்படுத்தி வாழத் தொடங்கினர். அவர்களே உயர்திணை எனப் போற்றப்பெற்றனர். தமிழ் மொழி பேசும் தமிழ...